தேனியில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் எரிப்பு!

Subscribe to Oneindia Tamil


தேனி: தேனியில் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் சலசலப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்த படியாக எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், ரேஷன் கடை போன்றவற்றில் ஆணுறைகள் இலவசமாக தரப்படுகின்றன.

இந்த நிலையில் தேனி கொட்டக்குடி ஆற்று தடுப்பணை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதில் பல ஆணுறைகள் பாதி எரிந்தும், மீதி எரியாத நிலையிலும் இருந்துள்ளன. இவற்றின் உண்மையை உணராத சிறுவர்கள் ஆணுறையை எடுத்து பலூன்களாக ஊதி விளையாடி உள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் என்ன என்று பார்த்தபோதுதான் ஆணுறைகள் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அதிகாரிகள் ஆணுறைகள் அங்கு எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+