பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: டெல்லியில் தங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ராஜஸ்தான் இல்லத்தில் கடும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளார் தஸ்லிமா.
பல ஆண்டுகளுக்கு முன்பு லஜ்ஜா என்ற நூலை எழுதப் போக வங்கதேசத்தில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் தஸ்லிமா. முஸ்லீம் அடிப்படைவாதிகள், தஸ்லிமாவுக்கு பாத்வா விதித்தனர். அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. இதையடுத்து வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் தஸ்லிமா.
கொல்கத்தாவில் தங்கியிருந்த அவருக்கு எதிராக இந்தியாவிலும் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின. சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் தஸ்லிமாவை அடிக்கப் பாய்ந்தனர்.
இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு தஸ்லிமாவுக்கு எதிராக கொல்கத்தாவில் பெரும் கலவரம் மூண்டது. ராணுவத்தை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதையடுத்து கொல்கத்தாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் தஸ்லிமா.
அங்கிருந்து ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமாவை ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூரில் தங்க வைக்காமல் டெல்லிக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்ட தஸ்லிமா தற்போது அங்குள்ள ராஜஸ்தான் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தஸ்லிமா தங்கியுள்ள ராஜஸ்தான் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதலில் தஸ்லிமாவை டெல்லிக்கு வெளியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி ராஜஸ்தான் இல்லத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உள்துறை அமைச்சகம் தஸ்லிமாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த இடத்திலும் கூட தஸ்லிமா தற்காலிகமாகத்தான் தங்க வைக்கப்பட்டுள்ளார். விரைவில் வேறு ஒரு நிரந்தர இடத்திற்கு அவர் மாற்றப்படக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை முதல் பல்வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டு வருவதால் தஸ்லிமா மனதளவில் மிகவும் நொந்து போயுள்ளார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று விரக்தியுடன் கூறியுள்ளார் தஸ்லிமா.
ராஜஸ்தான் இல்லத்தில் இன்று காலை முதல் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications