பாஸ்போர்ட்டை நிரந்தரமாக ஒப்படைக்கக் கோரி வைகோ மனு
சென்னை: பாஸ்போர்ட்டை நிரந்தரமாக தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட 9 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை மறு ஆய்வு செய்த குழு, இந்த வழக்கை திரும்ப பெறும்படி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
இதற்கிடையில் வைகோவை ஜாமீன் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் நிபந்தனையின்படி பாஸ்போர்ட்டை பொடா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பொடா நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை வைகோ ஒப்படைத்தார்.
இந் நிலையில் வெளிநாடு செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி சமீபத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்தார். அதன்படி பாஸ்போர்ட்டை வழங்கிய நீதிமன்றம் டிசம்பர் 7ம் தேதி மீண்டும் பொடா நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் பாஸ்போர்ட்டை நிரந்தரமாக தன்வசம் வைத்திருக்க உத்தரவிடக் கோரி வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் மற்றும் பெரிய கருப்பையா ஆகியோர், இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு க்யூ பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30ம் தேதி ஒத்திவைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications