கலைவாணர் அரங்கத்தை இடித்து புது அரங்கம் கட்ட முடிவு

சென்னை சேப்பாக்கத்தில் எழிலுற நிற்கும் அரங்கம்தான் கலைவாணர் அரங்கம். திரையுலகில் பெரும் சேவையாற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவாக இந்த அரங்கத்தை தமிழக அரசு கடந்த 1974ம் ஆண்டு கட்டியது. திமுக அரசில் கட்டப்பட்ட இந்த அரங்கத்தை அப்போதைய முதல்வராக இருந்த முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அந்தக் காலத்தில் இருந்த வசதிகளுடன் கூடிய அரங்கமாதலால், இப்போது கலைவாணர் அரங்கம் பல்வேறு அசவுகரியங்கள் நிறைந்த அரங்கமாக மாறி விட்டது.
கடந்த 33 ஆண்டுகளாக பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட கலைவாணர் அரங்கத்தை இடித்து விட்டு உலகத் தரத்திலான வசதிகளுடன் கூடிய நவீன அரங்கமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த யோசனையை முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்டடக் கலை நிபுணரையும் கூட அரசு தேர்வு செய்து விட்டது. விரைவில் கட்டடத்தைப் பார்வையிட்டு அதை புதுப்பித்து எப்படிக் கட்டுவது என்பது குறித்த அறிக்கையை அந்த நிபுணர் அரசிடம் அளிக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து புதிய கலைவாணர் அரங்கம் கட்டுவது தொடர்பான பணிகளை அரசு மேற்கொள்ளும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications