பாக். தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி
ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடந்த இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களில் 25 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டியில் இன்று 2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தன.
உள்ளூர் நேரப்படி காலை 7.45 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் நடந்தன. ராணுவ தலைமையகத்தின் நுழைவாயில் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகின.
இந்த இரு தாக்குதல்களிலும் 25க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவத்தினர்.
சத்தர் என்ற இடத்தில் உள்ள ராணுவத் தலைமையக நுழைவாயிலில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று காலை 2 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு தற்கொலைப் படைத் தீவிரவாதி, காருடன் நுழைவாயிலில் மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இன்னொரு தாக்குதல் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் நடந்தது. காரில் குண்டுகளுடன் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, ராணுவ வீரர்கள் வந்த பேருந்தில் காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் ஹம்சா முகாமுக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் அந்த பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது. பலர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இரு சம்பவங்களிலும் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இரு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவங்கள் நடந்த இடத்தை ராணுவம் முற்றுகையிட்டு அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications