விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு மையம் தகர்ப்பு

சமீப காலமாக விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை உக்கிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் உள்ள தர்மாபுரத்தில் விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை விமானப் படையினர் குண்டு வீசித் தாக்கினர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை கிளிநொச்சியில் உள்ள தர்மாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு மையத்தின் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இதில் அந்த மையம் சேதமடைந்தது. இந்த மையத்தில்தான் புலிகளின் தலைவர்கள் அடிக்கடி கூடி ஆலோசனை நடத்துவர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதல் முழு வெற்றி பெற்றுள்ளதாக தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
7 அப்பாவிகள் பலி - புலிகள்:
இருப்பினும் இந்தத் தகவலை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 அப்பாவிகள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைநந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தினம் - கொழும்பில் உஷார்:
இதற்கிடையே, வருகிற 27ம் தேதி மாவீரர் தினம் வருகிறது. அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்தவுள்ளார். அப்போது முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை அவர் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரர் தினத்தையொட்டி புலிகள் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற அச்சம் கொழும்பில் நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications