சபரிமலையில் கமாண்டோ படை கண்காணிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அங்கு கமாண்டோ படை போலீசாரும், உளவுப்படையினர் மாறுவேடத்திலும் தீவிரமாக பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. 41 நாட்கள் நடக்கும் இந்த மண்டல பூஜை திருவிழாவில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய இருமுடி கட்டி வருவார்கள்.
மண்டல பூஜை தொடங்கிய நாளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் கோழிக்கோடு மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு போன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சபரிமலை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எங்கும் வெடிகுண்டு இல்லை. இருப்பினும் பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் 10 பேர் சபரிமலை பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர உளவுத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற 60 பேர் பக்தர்களோடு பக்தர்களாக சாதாரண உடையில் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications