அண்ணா நிதியுதவி அளித்துக் கட்டிய பள்ளி இடிந்தது
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள, அறிஞர் அண்ணா நிதியுதவி அளித்துக் கட்டப்பட்ட பள்ளிக்கூட கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் வகுப்பில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வாலாஜாபாத்தில் உள்ள அரசுப் பள்ளி கடந்த 1942ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பள்ளியைக் கட்டுவதற்காக அறிஞர் அண்ணா நாடகம் நடத்தி அதன் மூலம் பணம் வசூலித்துக் கொடுத்தார். அந்த நிதியை வைத்துத்தான் இக்கட்டடம் கட்டப்பட்டது.
காலப் போக்கில் பள்ளிக் கட்டடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாணவர்கள் காலையில் காலை வழிபாட்டுக்காக மைதானத்தில் குழுமியிருந்தனர். அந்த சமயத்தில் 10ம் வகுப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தக் கட்டடத்திற்குப் பதில் சமீபத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அதை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications