நாகர்கோவில் அருகே குளம் உடைந்து ஊருக்குள் வெள்ளம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே குளம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
நாகர்கோவில் அருகே குலசேகரபுரத்திலிருந்து மயிலாடி செல்லும் சாலையில் 67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது புத்தனார்குளம். இந்தக் குளத்தில் உள்ள தண்ணீரின் மூலம் 250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில நாட்களாக குளத்தின் மடை பகுதியில் நீர் கசிவு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் உடைப்பு பெரிய அளவில் ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்த தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் வெளியேறியது.
இதில் அந்த பகுதியில் இருந்த வாழைகள், நெற் பயிர்கள் முழ்கியது. தென்னந் தோப்புகுள்ளும் வெள்ளம் புகுந்தது. குளத்தில் இருந்து வெளியேறிய வெள்ளம் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்க்ப்பட்டது.
ஈத்தங்காடு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஈத்தங்காடு பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த பகுதிகளுக்கும் தண்ணீர் சூழ்ந்தது.
காலையும் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் நெற் பயிர்கள் முழுமையாக நீரில் முழ்கி உள்ளன. குளத்தின் அருகே உள்ள வயல் வெளிகள் மணல் திட்டுகளாக உள்ளது. நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.












Click it and Unblock the Notifications