பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஜப்பானில் நிலநடுக்கம் - வீடுகள் ஆடின
மெக்சிகோ சிட்டி: பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஜப்பான் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. வீடுகள், கட்டடங்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர்.
மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானில் நிலநடுக்கம்:
ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இவாகி நகருக்கு வடகிழக்கில் 45 மைல் தொலைவில் இந்திய நேரப்படி நேற்றிரவு 7.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
பிலிப்பைன்ஸிலும் ...
இதேபோல பிலிப்பைன்ஸிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மணிலா, லூசான் தீவில் உள்ள பல நகரங்களில் கட்டடங்கள் ஆடின.
நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மணிலாவில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துத் தெரியவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications