ஆசிரியர்களுடன் இணைத்து தவறாக பேசியதால் மாணவி தற்கொலை
கிருஷ்ணகிரி: பள்ளியில் வேலை பார்க்கும் பயிற்சி ஆசிரியர்களுடன் தன்னை ஆசிரியை தவறாக இணைத்து பேசியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணியனின் மனைவி புஷ்பா. மகள் சுடர்விழி. சுப்பிரமணியன் மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை பார்த்து வருகிறார். புஷ்பா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.
சுடர்விழி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர்களாக இரு ஆண் ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உடற் பயிற்சி வகுப்பு நேரத்தின்போது மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த ஆசிரியர்களுடன் சுடர்விழி சகஜமாக பழகி வந்துள்ளார். இதை ஆசிரியை லதா மற்றும் சுடர்விழி படிக்கும் வகுப்பின் லீடர் தனுஜா ஆகியோர் கண்டித்துள்ளனர்.
மேலும் மற்ற மாணவிகள் யாரும் சுடர்விழியுடன் பேசக் கூடாது என்றும் ஆசிரியை லதா
கூறியுள்ளார்.
இதையறிந்த சுடர்விழி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவர் படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சுடர்விழியின் தாய் புஷ்பா, தனது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறியழுதார்.
தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சுடர்விழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுடர்விழி இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த
கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், நான் கூடைப்பந்து பயிற்சியாளரிடம் சோஷியலாகத்தான் பழகி வந்தேன். இது எனது பள்ளி ஆசிரியையின் பார்வைக்கும், வகுப்பு லீடர் தனுஜாவின்
பார்வைக்கும் தவறாக தெரிந்தது. இதனால் என்னுடன் சக மாணவிகள் எவரும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதைக் கேட்டு எந்த மாணவியும் என்னுடன் பேசுவதில்லை. இது என்னை மிகவும் பாதித்தது. எனது கஷ்டத்தை எவரிடமும் சொல்ல முடியவில்லை. இத்தனை சோகத்துடன்
என்னால் வாழப் பிடிக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.
எனது சாவுக்கு பள்ளி ஆசிரியையும், வகுப்பு லீடருமே காரணம் என்று சுடர்விழி எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பள்ளி ஆசிரியை லதா மற்றும் மாணவி தனுஜா ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications