ஊழலற்ற அரசு இருந்தால்தான் சுகாதார வசதி கிடைக்கும் - கலாம்
துர்காபூர் (மேற்கு வங்கம்): ஊழலற்ற அரசு உருவாக வேண்டும். அப்போதுதான் அனைத்து சமுதாய மக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதியை வழங்க முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில், சர்வதேச மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை அவர் நேற்று தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது கலாம் கூறுகையில், ஊழலற்ற ஒரு அரசு உருவாக வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் அந்த அரசால் அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்து தர முடியும்.
கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாடும், பாகுபாடும் சமுதாயத்தில் இருக்கவே கூடாது. அது நமது வளர்ச்சியைத் தடுக்கும்.
நாம் அடிப்படை அறிவியலுக்கும், அடிப்படைய ஆய்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால் இன்று ஆய்வுகளை நடத்த நிதி ஒரு பெரும் தடையாக இருப்பதால், ஆய்வுகள் முடங்கிப் போயுள்ளன.
நம்மிடம் போதுமான யுரேனியம் இல்லை. எனவே தோரியம் குறித்து நாம் சிந்திக்கலாம். அதேசமயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நாம் மறந்து விடக் கூடாது என்றார் கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications