திருமணம் நடக்க சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்
திருநெல்வேலி: தனக்கு திருமணம் நடப்பதற்காக ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்க சிறுவனை நரபலி கொடுப்பதற்காக சிறுவனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ரமேஷ்-பாலநாகம்மாள் தம்பதியின் மகன் முகிலன்(4). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எல்கேஜி படித்து வந்தான்.
கடந்த 25ம் தேதியன்று வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த முகிலனை காணவில்லை. சிறுவனின் பெற்றோர் உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரமேஷின் உறவுக்காரரான ஜோதிடர் சுப்பையாவின் மகன் அய்யப்பன்(23) மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அய்யப்பனிடம் விசாரித்தனர்.
அப்போது, சிறுவன் முகிலனை ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினான் அய்யப்பன்.
ஓரின சேர்க்கை வெறியில் இந்த கொலை நடந்ததாக போலீசார் முதலில் தெரிவித்தனர். பின்னர் முகிலனின் தாய் பாலநாகம்மாள் மீது அய்யப்பனுக்கு ஒரு தலைக் காதல் இருந்ததாகவும், இதற்கு இடையூறாக இருந்ததால் முகிலனை அய்யப்பன் கொலை செய்யதுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இப்போது இந்த கொலை விசாரணையில் திடீரென்று மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் ஏற்பட்டு வந்த திருமண தடையை போக்க அய்யப்பன் சிறுவனை நரபலி கொடுத்ததாகத் தெரிய வந்துள்ளது.
தனது ஜாதகத்தில் உள்ள திருமண தோஷத்தை போக்குவதற்காக 3 நரபலிகளை கொடுக்க அய்யப்பன் திட்டம் போட்டுள்ளான். அதில் முதல் கட்டமாக சிறுவன் முகிலனை கொன்று கிணற்றில் தள்ளியுள்ளான்.
அய்யப்பனை போலீஸ் காவலில் எடுத்து மேலும் தீவிரமாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications