டிச. 3 வரை ஜோதி மீது நடவடிக்கை இல்லை - அரசு வக்கீல்
சென்னை: சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜ்யசபா அதிமுக எம்.பியும், வழக்கறிருமான என்.ஜோதி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் ராவ் என்பவர், ஜோதி மீது சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜோதி, பலமுறை டெல்லிக்கு பயணம் செய்தார். காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பாக அவர் டெல்லிக்குப் பயணம் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் காவிரி நடுவர் மன்றம் தொடர்பான எந்த வழக்கிலும் அரசு சார்பில் அவர் அதிகாரப்பூர்வமாக வக்கீலாக நியமிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அவர் தமிழக அரசுப் பணத்தில் பலமுறை விமானத்தில் டெல்லிக்குச் சென்றுள்ளார். தமிழக அரசின் டெல்லி இல்லத்திலும் தங்கியுள்ளார்.
இந்த வகையில் அவர் பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறிய அமர்நாத் ராவ், சிபிசிஐடியிலும் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிபிசிஐடி போலீஸார் அமர்நாத் ராவின் புகாரின் பேரில் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று ஜோதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான உதவி அரசு வழக்கறிஞர் ராஜா இளங்கோ, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரினார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஜோதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
அப்போது அமர்நாத் ராவ் ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஜோதிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரியிருந்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சுதந்திரம், இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications