Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறந்த ஆசிய வணிகத் தலைவர் போட்டி-இன்று முடிகிறது வாக்கெடுப்பு

Subscribe to Oneindia Tamil

Syed Sallahudin
துபாய்: சிறந்த ஆசிய வணிகத் தலைவர், மத்திய கிழக்கு நாடுகளில் சிறப்புப் பங்களிப்பு அளித்த சாதனையாளர் விருதுகளுக்கு இன்றுடன் ஓட்டெடுப்பு முடிகிறது.

பிரபல Asian Business Award Middle East நிறுவனம், அமெரிக்காவின் Pricewater House copers நிறுவனத்துடன் இணைந்து இந்த விருத்துக்கான போட்டியை நடத்துகிறது.

சிறந்த ஆசிய வணிகத் தலைவர் (Asian Business Leader of the Year), மத்திய கிழக்கு நாடுகளில் சிறப்புப் பங்களிப்பு அளித்த சாதனையாளர் (Outstanding Asian contribution to the Middle East Development)விருதுகளுக்கு நடக்கும் போட்டியின் இறுதிச் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல வணிக நிறுவனமான ETA-Ascon, ETA Star நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் சையது முஹம்மது சலாகுதீன் உள்ளார்.

36 ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனமாக இருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்து படிப்படியாக, கட்டிடம் கட்டும் நிறுவனத்தில் துவங்கி இன்று எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், கப்பல் வணிகம், ஆட்டோ மொபைல், லிப்ட்கள் (மின் தூக்கி), சிமெண்ட், ஈடிஏ ஸ்டார், ஸ்டார் டெக்னாலஜிஸ், ஹோம் அப்ளையன்ஸஸ் என எண்ணற்ற தொழில்கள்-தொழிற்சாலைகளைத் துவக்கி

இந்தியர்கள், இளநிலை பட்டதாரிகள், தொழில் நிபுணர்கள், தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கொடுத்ததோடு மட்டுமின்றி, துபை, அமீரகம், மற்றும் உலகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழில்கள் மூலம் முத்திரை பதித்தவர் சையது முஹம்மது சலாகுதீன்.

இது முறையான திட்டமிடல், நுண்ணிய திறனாய்வு, முயற்சிகளில் முழு ஈடுபாடு, வெற்றியில் அனைவருக்கும் பங்கு என அனைவரையும் ஊக்கப்படுத்தி தலைமை தாங்கியதற்கு கிடைத்த பரிசாகும்.

இந்தியரான சலாகுதீன் இந்தப் போட்டியில் வெற்றிபெற Online மூலமாகவும் SMS மூலமாகவும் வாக்களிக்க இன்று நல்ல வாய்ப்பாகும்.

இவரது வெற்றி இந்தியர்களுக்கு பெருமையையும், அவரால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான தொழில்துறை நிபுணர்கள், நிர்வாகிகளுக்கு ெபரும் மகிழ்ச்சியைத் தரும் என்கிறார் வளைகுடாவில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தொழில்துறை நிர்வாகப் பொறியாளரான எம்.ஜே.எம்.இக்பால்.

சலாகுதீனுக்க வாக்களிக்க, http://www.abameonline.com/ என்ற இணையத் தளத்திற்கு சென்று உங்களை ரிஜிஸ்தர் செய்து கொண்டு வாக்களிக்கலாம்.

SMS மூலம் வாக்களிக்க:

1. type "ABA OC SYED" and send it to 7575
2. type "ABA BL SYED" and send it to 7575

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+