பாலாறு: மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது - வைகோ

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து நேற்று வேலூரில் மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் முடிந்த பின்னர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 6ம் தேதி அணைக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசு பாரபட்சத்துடன் தமிழகத்திடம் நடந்து கொள்கிறது. ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுக்க அது முயலவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் உடனடியாக செயல்பட்டு, மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து அவற்றை தேசியமயமாக்க வேண்டும்.
எந்த மாநிலமும், பிற மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களும், சட்டங்களையும், விதிகளையும் மதித்து நடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
பாலாறு விவகாரம் மட்டுமல்லாது, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அனைத்து நதி நீர்ப் பிரச்சினைகளைலும் தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றி விட்டது, பாரபட்சப் போக்கையே அது கடைப்பிடித்துள்ளது என்றார் வைகோ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications