பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் தேங்காய் உடைக்க தடை
கொல்லம்: பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதாலும், தீவிரவாத தாக்குதல் பீதி நிலவுவதாலும், சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய்களை வீசி எறிந்து உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
15வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தில் தேங்காய்களை வீசி எறிந்து உடைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாதாரண உடையிலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வந்து கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மின்சார வாரிய அலுவலகம், சரங்குத்தி, சபரி பீடம் ஆகிய 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கோபுரங்களில் பைனாகுலர் மூலம் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
10 டி.எஸ்.பி.க்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 65 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தற்போது 60 கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதுதவிர பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
5-ந் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது முதல் 6-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்படுவது வரை 18-ம் படி ஏற யாருக்கும் அனுமதி கிடையாது.
சன்னிதானம் செல்லும் பக்தர்கள் பெரிய நடைப்பந்தல் தாண்டிய பிறகு கைப்பை, காமிரா, மொபைல்போன் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது.
5-ந் தேதி நடை அடைக்கப்பட்டது முதல் 7-ந் தேதி அதிகாலை வரை வடக்கு நடை வழியாக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஸ்ரீகோவில் முன்பு உள்ள உண்டியல் 6-ந் தேதி அகற்றப்படும். அதற்கு பதிலாக தெற்கு பகுதியில் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் நெய் தோணியில் தேங்காயை வீசி எறியவும் கூடாது, உடைக்கவும் கூடாது. 18-ம் படி மிதித்த பிறகு சோபானம் வரும் வரை பக்தர்கள் இருமுடியை அவிழ்க்க கூடாது.
போலீசாருக்கு சந்தேகம் இருந்தால் இருமுடிகளை அவிழ்த்து சோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications