ஐ.சி.எல். 20-20 போட்டிகளுக்கு மவுசு இல்லை
மும்பை: பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக்கின் 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சொற்ப ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில்தான் இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்தவுடன், ஜீ டிவியின் சுபாஷ் சந்திரா, இந்திய கிரிக்கெட் லீக்கை அறிவித்தார். கபில் தேவ் இதன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் கடுப்பான இந்திய கிரிக்கெட் வாரியம், ஐசிஎல்லை அங்கீகரிக்க மறுத்தது. இந்திய வீரர்கள் யாரும் இதில் சேரக் கூடாது என தடையும் விதித்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்க மறுத்ததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் ஐசிஎல்லை அங்கீகரிக்க மறுத்து விட்டது.
இருப்பினும் பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இதில் இணைந்தனர். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டது ஐசிஎல் நடத்தி வரும் 20-20 போட்டிகள். நவம்பர் 30ம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்கின. இதற்காக பெரிய அளவில் விளம்பரங்களும் கூட செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் எதிர்பார்ப்புக்கு மாறாக மகா டல் நிலையில் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஜீ டிவி குழுமத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட சானல்களின் ஒரு மணி நேர நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பை விட இந்தப் போட்டிகளுக்கு மகா மோசமான வரவேற்பு கிடைத்துள்ளதாக மும்பையைச் ேசர்ந்த டிவி ரேட்டிங் ஏஜென்சி ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சனிக்கிழமை மும்பை சாம்பியன்களுக்கும், ஹைதராபாத் ஹீரோக்களுக்கும் இடையே நடந்த போட்டியின் அரை மணி நேர ஆட்டத்தை மிகவும் சொற்பமானவர்களே பார்த்தனராம்.
ஜீ ஸ்போர்ட்ஸ் சானலில் ஒளிபரப்பான இந்த ஆட்டத்தை, அந்த சானலின் மொத்த வாடிக்கையாளர்களில் 1 சதவீதம் பேரே பார்த்ததாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
சமீப காலத்தில் டிவிகளில் ஒளிபரப்பான ஒரு கிரிக்கெட் போட்டிக்குக் கிடைத்துள்ள மிக மோசமான வரவேற்பு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை ஜீ குழுமம் மறுக்கிறது. அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 125 நாடுகளில் ஐசிஎல் போட்டிகளை மக்கள் பார்த்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனால் அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்கிறார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications