கருணாநிதிக்கு எதிராக இந்து மக்கள் கட்சி கருப்பு கொடி
கடலூர்: நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
கடலூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் மலேசியா முஸ்லிம் நாடாக மாறியுள்ளது. தமிழர்களின் கோவில்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடத்தியதற்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது 8 கோடி தமிழர்களின் பிரச்சனை அல்ல. இது இந்தியாவில் 100 கோடி மக்கள் வாழும் இந்து சமுதாயத்தின் மீது நடக்கும் தாக்குதல் ஆகும். இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்து அமைப்பை சேர்ந்த தென்காசி ரவி பாண்டியன், குமார் பாண்டியன், சேகர் பாண்டின், செந்தில் பாண்டியன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு அரசு உடனே நிவாரணம் வழங்கவேண்டும்.
நிவாரணம் வழங்கவில்லையென்றால் நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம்.
ஹிந்து கடவுளை அவமதிக்கும் வித்தில் செருப்புடன் நடிகை குஷ்பு அமர்ந்திருந்தது கண்டிக்கதக்கது. குஷ்புவின் இந்த செயலுக்காக கும்பகோணம், சென்னை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளோம். குஷ்பு மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications