இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேஷியாவில் தீவுப் பகுதிகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவின் வடக்குப்பகுதியிலிருந்து 138 கிமீ தொலைவில் உள்ள கடல்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் ஆடின.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி ஆபத்து எதுவுமில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா, பெங்குலு, சுலாவெசி தீவுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications