விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தத் தடை
சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக காரம்பாக்கம், மணப்பாக்கம், கோவூர், கோலம்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 1069 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதை எதிர்த்து பார்த்திபன் உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைதான் வெளியிட முடியும். மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை.
எனவே சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசால் நிலங்களை கையகப்படுத்த முடியாது. எனவே இதுதொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜோதிமணி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அதுவரை நிலம் கையகப்படுத்தும் பணிக்கு இடைக்காலத் தடையும் விதித்தார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications