பாபர் மசூதி தினம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பாதுகாப்பு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக தலைநகர் சென்னை மிக பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

117 வாகனங்களில் போலீஸார் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் வாகனச் சோதனைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

விமான நிலையம், ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை நகர எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரிலும் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மதுரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையில் கருப்புப் பூணைப் படை:

இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், ஏற்கனவே பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.

வெடிகுண்டு நிபுணர்கள், சாதாரண உடை போலீஸார் அதிக அளவில் சபரிமலை கோவில் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ரகசியக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அய்யப்பன் கோவில், மாளிகைபுரம் பகவதி அம்மன் கோவில், பம்பை கணபதி கோவில் ஆகிய இடங்களில் தீவிரக் கண்காணிப்பும், பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கேரள போலீஸாருடன், தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முதல் கருப்புப் பூணைப் படை கமாண்டோக்கள் அய்யப்பன் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5 மணிக்கு நடை மூடப்பட்ட பின்னர் 18ம் படி வழியாக பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டது. இன்று பகல் முழுவதும் இந்தத் தடை அமலில் இருக்கும்.

சன்னிதானத்தில் செல்போன்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களை வடசேரிக்கரையிலிருந்தே போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

பம்பையிலும், சன்னிதானத்திலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மலைப்பகுதியில் கடைகள் வைத்திருப்போர் அனைவரின் கை ரேகைகளையும் போலீஸார் பதிவு செய்து வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+