சுஷில் ஹரி பள்ளியில் ரோட்டரி இளம் தலைவர் விருது

கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரோட்டரி கிளப் இன்டஸ்ட்ரியல் சிட்டி, ரோட்டரி கிளப் டவுன்டவுன், பச்சையப்பாஸ் கல்லூரி ரோட்டரியாளர்கள் சார்பில் ரோட்டரி இளம் தலைவர் விருதுக்கான போட்டி நடைபெற்றது.
இதில், அண்ணா ஆதர்ஷ், சின்மயா வித்யாலயா, குலபதி குருகுலம் பள்ளிகளிலிருந்து 90 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான ஸ்ரீ சிவசங்கர் பாபா மாணவர்கள் மத்தியில், நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மத்திய சென்னை ரோட்டரி கிளப் சார்பில் 2007ம் ஆண்டுக்கான ரோட்டரி இளம் தலைவர் விருது - கனவுகளை நனவாக்குங்கள் என்ற தலைப்பிலான போட்டி நிகழ்ச்சி நடந்தது.
இதில் கில் ஆதர்ஷ், சுஷில் ஹரி, ராமகிருஷ்ணா மிஷன், கோபாலபுரம் ஆடவர் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வி.ரமணா சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது மைண்ட் கேம்ஸ், திறனறி சோதனை, பேச்சுப் போட்டி, பொது சுகாதாரம் குறித்த பேச்சு உள்ளிட்ட பேச்சுப் போட்டி உள்ளிட்டவை இடம்பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சுஷில் ஹரி பள்ளியின் சார்பில் உணவும், இருப்பிட வசதிகளும் செய்து தரப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications