'நடராஜன்': 13 அதிமுகவினர் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: நடராஜன் பங்கேற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட அதிமுகவினர் 13 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் வருகை தந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது பெரும் திரளான அதிமுகவினர், நடராஜன் கலந்து கொண்ட கூட்டங்களுக்குச் சென்றனர்.

இதையடுத்து அவர்களை படிப்படியாக கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ஜெயலலிதா. முதலில் திருச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் 13 பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் சிவசாமி, பொதுக் குழு உறுப்பினர் லோகநாதன், மாணவர் அணி செயலாளர் மெட்ரோ பிரபு மற்றும் ஷாஜகான், தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை மதியழகன், பட்டு என்கிற பாலசுப்ரமணியம், விசு சிவக்குமார், கரிகாலன், பெரியசாமி, குமார், கோபால், முருகப்பன் உள்ளிட்ட 13 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+