திமுக இளைஞரணி மாநாடு: உள்துறை செயலரிடம் அதிமுக புகார்
சென்னை: நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக, விதிமுறைகளுக்குப் புறம்பாக தனியார் பேருந்துகளின் வழித் தடங்கள் திருப்பி விடப்படப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழக அரசின் உள்துறைச் செயலாளரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கொறடா கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்ட மனு இன்று உள்துறைச் செயலாளர் மாலதியிடம் அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக, மாநிலம் முழுவதும் 5000 பேருந்துகளை, அவற்றின் வழக்கமான வழித்தடத்தை மாற்றி மாநாட்டுக்கு வருமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
வழக்கமான வழித்தடங்களில் செல்லாமல் இந்தப் பேருந்துகள் நெல்லை மாநாட்டுக்காக இயக்கப்பட்டால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி விதிமுறைகளுக்குப் புறம்பாக, பேருந்துகள் இயக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. தனியார் பேருந்துகள் வழக்கமான வழித்தடத்திலேயே இயக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications