எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை-சரத்குமார்
நாமக்கல்: தேர்தலில் எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
15 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்காமல் ஆட்சி நடத்தியதால், தமிழகம் பல்வேறு நிலைகளில் பின் தங்கியுள்ளது. தமிழக மக்களையும், தமிழகத்தையும் பாதுகாக்க சரியான வழியில் செயல்படும் அரசு தேவை. அதற்காக உருவாக்கப்பட்டது தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.
தேர்தல் எப்போது வந்தாலும் தனித்தே போட்டியிடுவோம். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. ஒரு அரசு 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்யவிடாமல் தடுக்கும் ஜனநாயக விரோத போக்கில் ஈடுபட மாட்டோம். நாற்காலியை பறிப்பது எங்கள் கட்சிக் கொள்கை அல்ல.
2008 ஜனவரி 20ம் தேதியன்று மதுரையில் நடைபெறும் முதல் அரசியல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும். இளைஞர்கள் புதிய கட்சிக்கு செல்கின்றனர் என்பதால் தான், 22 வருடங்களுக்கு பின்னர் திமுக இப்போது இளைஞரணி மாநாடு நடத்துகிறது.
தமிழக நலனில் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படாததால் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 26 சதவீதம் மின் திருட்டு உள்ளது. இதைத் தடுத்தால் மின் பற்றாக்குறை பெருமளவு கட்டுப்படுத்தப்படும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்கு எங்களது ஆதரவு தொடரும்.
ஜனவரி 11ம் தேதியன்று மலேசியா சென்று அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்து, தமிழர்கள் நலனைக் காக்கும் வகையில் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications