பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என மத்திய அரசு தீர்மானித்து விட்டது. மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை ரத்து செய்யவும் அது முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை செயலாளர் எம்.எஸ். சீனிவாசன் கூறுகையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டி விலை நிர்ணயத்தை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவைக் குழு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாததால், தினசரி ரூ. 250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ. 8.74ம், டீசல் லிட்டருக்கு 9.92 ரூபாயும், மண்ணெண்ணை லிட்டருக்கு 20.53 ரூபாயும், சமையல் வாயு சிலிண்டருக்கு 256.35 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.
வருகிற 14ம் தேதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு கூடி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ், டி.ஆர்.பாலு, சரத் பவார், முரளி தியோரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications