மோடிக்கு எதிராக போராட்டம்-திருமாவளவன், வீரமணி கைது

Subscribe to Oneindia Tamil


சென்னை: தலித்களை அவமதிக்கும் வகையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதிய புத்தகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கட்சி தலைவர் கி.வீரமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

மோடி எழுதியுள்ள தர்மயோக் என்ற புத்தகத்தில் மலம் அள்ளுவது யோக நிலையை அடைவதற்கு சமமானது. அந்த பணி கடமையாற்றுபவருக்கும், கடவுளுக்கும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்டித்து இன்று சென்னை மெமோரியல் ஹால் முன்பாக திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் போராட்டம் நடத்தின.

இந்த போராட்டத்திற்கு வீரமணியும், திருமாவளவனும் தலைமை தாங்கினர். போராட்டத்தின் போது மோடி எழுதிய புத்தகத்தை தீயிட்டு கொளுத்தினர்.

போராட்டத்தின் போது கி.வீரமணி பேசியாதவது,

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மலம் அள்ளுவது பற்றி கூறியிருக்கும் கருத்துக்கள் மனதை புண்படுத்துகின்றன. தமிழகத்தில் மனித பலத்தை மனிதன் அள்ளும் கொடுமை இருக்கக் கூடாது என்பதற்காக முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

திருமாவளவன் பேசுகையில்,

மலம் அள்ளும் கொடுமையை எதிர்த்து அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வழியில் நாங்களும் இந்த கொடுமையை எதிர்த்து போராடுவோம் என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வீரமணி, திருமாவளவன், செல்வபெருந்தகை எம்.எல்.ஏ உட்பட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கொடித்தோப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+