மலேசியா-கிளர்ச்சியை தூண்டிவிட்டதாக ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கைது

கோலாலம்பூர்: சட்டத்துக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்டதாக இந்து உரிமை நடவடிக்கை இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பி.உதயக்குமாரை இன்று மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மலாய் இனத்தவர்களுக்கு சமமாக பூர்வீக இந்தியர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகள் தரப்பட வேண்டும், தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தக் கூடாது என்று கோரி கடந்த மாதம் 25ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு, இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இது தொடர்பாக 35க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் இந்து உரிமை நடவடிக்கை இயக்கத்தின் சட்ட ஆலோசகர் உதயகுமாரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அவர் மீது மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்டு ராஜதுரோகம் செய்து விட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மலேசியாவின் காவல்துறை ஐஜி முசா ஹாசன் கூறியதாவது,
நீதிமன்ற உத்தரவுப்படி ஹிண்ட்ராஃப் தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
இவர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதால் தான் அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது.
மலேசிய தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அமைதியான முறையில் கையாள மாட்டோம். நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications