அத்வானி குறித்த மன்மோகன் கருத்து: பாஜக கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ள கருத்து, அவரது விரக்தியால் ஏற்பட்ட புலம்பல் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
மோடியைப் பார்த்து பயந்துதான் அத்வானியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், இதுவரை பிரதமர் பதவி வகித்த யாருமே, அடுத்த கட்சியின் விவகாரம் குறித்து இப்படி ஒரு மோசமான கருத்தைக் கூறியதில்லை.
மன்மோகன் சிங் பெரும் விரக்தியில் உள்ளார். அதனால்தான் இப்படிப் புலம்பியுள்ளார் என்று கூறினார் வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications