பேப்பர் வியாபாரியிடம் லஞ்சம்: பிடிபட்ட காவல்துறை உதவி ஆணையர்
திருச்சி: திருச்சியில் பழைய பேப்பர் வியாபாரியிடம் ரூ. 8,500 லஞ்சம் வாங்கிய காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆணையர் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருபவர் பரூக் முகம்மது. சிலருடன் சேர்ந்து கூட்டாக இந்தத் தொழிலை செய்து வந்தார் முகம்மது. இந்த நிலையில் கடந்த ஆண்டு திருச்சி மாநகர குற்றப் பிரிவில் ஒரு புகார் கொடுத்தார் முகம்மது.
அதில், தனது பங்குதாரர்கள் பண மோசடி செய்து விட்டதாகவும், நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார். ஆனால் இந்தப் புகார் குறித்து போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் உடனடியாக இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் உதவி ஆணையர் முருகனை சந்தித்தார் பரூக் முகம்மது. ஆனால் வழக்கை விசாரிப்பதற்குப் பதில், விரைவாக முடித்துத் தர வேண்டுமானால், ரூ. 8,500 லஞ்சம் தர வேண்டும் என முருகன் பேரம் பேசியதாக தெரிகிறது.
ஆனால் பணத்தைக் கொடுக்க விரும்பாத பரூக் முகம்மது, பின்னர் வருவதாக கூறி விட்டு வந்தார். மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து டி.எஸ்.பி. அம்பிகாபதியின் ஆலோசனையின் பேரில் அடையாளம் இடப்பட்ட ரூபாய் நோட்டுக்களுடன் முகம்மது, முருகனின் வீட்டிற்குச் சென்றார். லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாக முருகனைப் பிடிக்க காத்திருந்தனர்.
லஞ்சப் பணத்தை முருகனிடம் முகம்மது கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் அவரைக் கையும் களவுமாக பிடித்தனர்.
உதவி ஆணையர் லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ள விவகாரம் திருச்சி காவல்துறையை அதிர வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications