ஒற்றுமையுடன் வாழ்கிறோம்-மலேசிய தமிழ் அமைச்சர்
சென்னை: மலேசியாவில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அங்கு இந்து சங்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர் என அந் நாட்டின் பெராக் மாநில அமைச்சரும் தமிழருமான ராஜு கூறியுள்ளார்.
மலேசியாவின் பெராக் மாநிலத்தின் (Perak State) முதல்வர் திராஜா கசாலி. இவரது தலைமையில் கல்வியமைச்சரும் தமிழருமான டத்தோ ராஜூ மற்றும் கல்வி நிபுணர்கள் அடங்கிய குழு சென்னை வந்துள்ளது.
பெராக் மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பாக தமிழக கல்வியாளர்களின் ஆலோசனையைப் பெற இந்தக் குழு வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அணைச்சர் ராஜூ நிருபர்களிடம் பேசுகையில்,
மலேசியாவில் மலேசியர்கள் தவிர்த்து தமிழர்கள், இலங்கை மக்கள், சீனர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அங்கு இந்து சங்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.
மலேசிய சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல.
எல்லா நாடுகளிலும் ஏற்றத் தாழ்வு உண்டு. இந்தியாவில் கூட ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. அதே போலத்தான் மலேசியாவிலும் உள்ளது. இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
இந்த ஒற்றுமையை சீர்குலைக்க ஒரு சிறிய கும்பல் முயற்சிக்கிறது. கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications