திமுக பஸ் மோதி 2 ஏட்டுகள் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாநாட்டுக்காக சென்ற திமுக இளைஞர் அணியினர் சென்ற பேருந்து மோதி இரண்டு போலீஸார் பலியாயினர். இதனால் மதுரை – நெல்லை சாலையில 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திமுக இளைஞர் அணி முதல் மாநாடு நெல்லையில் இன்று தொடங்கியது. இதற்கான பாதுகாப்புப் பணியில் போலீஸார் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கங்கைகொண்டான் காவல் நிலையத்தைச் சேர்ந்த் தலைமைக் காவலர்கள் அய்யாச்சாமி, காளிசுந்தர் ஆகியோர் அழகியபாண்டியபுரம் நோக்கி பாதுகாப்புப் பணிக்காக செனறு கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையிலிருந்து திமுகவினர் வந்த பேருந்து மோதி இரு போலீஸாரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தால் அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications