மினி லாரி தாறுமாறாக ஓடி மோதி 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயமடைந்தனர்.

மதுராந்தகம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மினி லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது.

சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு அந்த லாரியில் கட்டுமானத் தொழிலாளர்கள், இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மினி லாரி திடீரென தாறுமாறாக ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது.

இதில் மினி லாரியில் இருந்த சுப்ரமணி (52), ராமதாஸ் (55), செல்லப்பா (42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 16 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் 5 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+