மலேசியத் தமிழர்களை விடுவிக்க உதவ பிரதமருக்கு வைகோ கோரிக்கை
சென்னை: மலேசிய அரசால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க தூதரக ரீதியில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் வசிக்கும் பெரும்பாலான பூர்வீக இந்தியர்கள் தமிழர்கள் ஆவர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அங்கு சம உரிமை கோரி போராடி கைதாகியுள்ள தமிழர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும்.
கோலாலம்பூரில் நவம்பர் 25ம் தேதி நடத்திய அமைதிப் பேரணிக்குப் பின்னர் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கக் கூட முன்வராத மலேசிய அரசு, அவர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையையும் விடுத்து வருகிறது.
எனவே இந்திய அரசு இதில் தலையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications