பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - இளங்கோவன்
சென்னை: பேனா முனையை விட எதுவும் வலிமையானதல்ல. எனவே பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த 20 பத்திரிக்கையாளர்கள், இதழியல் படிப்பில் 6 மாத டிப்ளமோவை முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஈழப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும். தமிழகத்தில் சிலர் இதை அரசியலாக்க முயன்று வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும். இதில் இலங்கைப் பத்திரிக்கையாளர்களின் பங்கு அதிகம் உள்ளது.
தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க உங்களது பேனாக்களைப் பயன்படுத்துங்கள். பேனா முனை கத்தி முனையை விட வலிமையானது, கூரானது. அப்படி இருக்கையில், துப்பாக்கிகளும், ஆயுதங்களும் எதற்கு.
எனவே இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். தங்களது பேனாவின் வலிமையால் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உதவ வேண்டும்.
சுதந்திரப் போராட்ட காலத்தின்போது பத்திரிக்கைகள்தான் முக்கியப் பங்கு வகித்தன. இந்தியாவை வல்லரசாக்கவும் அதே பத்திரிகைகள்தான் உதவ வேண்டும். மீடியாவின் சக்தி மற்ற எதையும் வலிமையானது என்றார் இளங்கோவன்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழ வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, துணைவேந்தர் பி.சத்யநாராயணன், இலங்கை துணைத் தூதர் பி.எம்.அம்ஸா, இலங்கை பத்திரிக்கை கழக இயக்குநர் ரங்க கலன்சூரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications