சிலி, சீனாவில் நிலநடுக்கம் - கட்டடங்கள் ஆடின
Subscribe to Oneindia Tamil
சிலி: சிலி மற்றும் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியடைந்தனர்.
சிலி நகரான சான்டியாகோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள புச்ன்கவி என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் ஆடின.
இதனால் வீடுகளில் இருந்த மக்கள் பயந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரம் இதுவரை தெரியவில்லை.
சீனாவிலும் ..
சீனாவின் ஹெய்பி என்ற இடத்தில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு அங்குள்ள கட்டடங்கள் லேசாக ஆடினாலும் பெரும்பாலான மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணரவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 3.2 ஆக ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications