சக டிரைவர், க்ளீனரை கடித்துக் குதறிய லாரி டிரைவர்
சென்னை: சென்னையில் நடு சாலையில் லாரியை நிறுத்தி விட்டு உடன் அமர்ந்து வந்த இன்னொரு டிரைவரையும், க்ளீனரையும், லாரி டிரைவர் கடித்துக் குதறியதாலும், சாலையில் சென்றவர்களையும் கடிக்கப் பாய்ந்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டிரைவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் லாரி நிறுவனத்தில் டிரைவராக இருந்து வருகிறார்.
நேற்று மும்பையிலிருந்து இரும்பு பாரத்துடன் சென்னைக்கு வந்தார். மண்ணடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சரக்கை இறக்கி விட்டு பூந்தமல்லி திரும்பினார்.
லாரியில் அவருடன் இன்னொரு டிரைவர் முருகன், க்ளீனர் பழனி ஆகியோர் இருந்தனர். அப்போது திடீரென வியாசர்பாடி சர்மா நகர் அருகே லாரியை நடு சாலையில் நிறுத்தினார்.
பின்னர் முருகனையும், பழனியையும் சரமாரியாக கடிக்க ஆரம்பித்தார். இருவரும் அதிர்ந்து போய் வலியால் துடித்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர், செல்வராஜின் பிடியிலிருந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களையும் கடிக்கப் பாய்ந்தார் செல்வராஜ்.
இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது. சிலர் துணிச்சலாக செயல்பட்டு செல்வராஜைப் பிடித்து கட்டிப் போட்டனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து செல்வராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை நாய் ஏதாவது கடித்து ரேபிஸ் வந்திருக்கிறதா அல்லது மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து டாக்டர்கள் ஆய்ந்து வருகின்றனர்.
செல்வராஜிடம் கடிபட்ட இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள்ளனர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications