திமுக வேன் மோதி பலியான 2 ஏட்டுகள் குடும்பத்திற்கு நிதியுதவி, அரசு வேலை
திருநெல்வேலி: நெல்லை அருகே திமுக தொண்டர்கள் வந்த வேன் மோதி பலியான 2 ஏட்டுகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற திமுக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக கங்கை கொண்டான் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த தலைமைக் காவலர்கள் அய்யாசாமி (50), காளிசந்தர் (47) ஆகியோர் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அழகிய பாண்டியபுரம் என்ற இடத்தில் சென்றபோது, சென்னையில் இருந்து திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நிதியுதவி - அரசு வேலை:
திமுக தொண்டர்கள் சென்ற வேன் மோதி 2 தலைமைக் காவலர்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், இருவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒரு நபருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications