3 ஆண்டுகளில் சென்னையில் மெட்ரோ ரயில்: ஜெயபால் ரெட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் இன்னும் 3 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னை வந்த ஜெயபால் ரெட்டி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடுத்த ஆண்டு அடிக்கல் நாட்டப்படும்.
மத்திய அரசும், தமிழக அரசும் இந்தத் திட்டத்திற்கு சம அளவில் முதலீடு செய்யும். மீதமுள்ள பணம் ஜப்பான் வங்கி ஒன்றிலிருந்து கடனாகப் பெறப்படும்.
முதலிர் 40 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதை அமைக்கப்படும். இதற்கான செலவு ரூ. 7000 கோடியிலிருந்து ரூ. 8000 கோடிக்குள் இருக்கும்.
தரைக்கு மேல் உள்ள பகுதியில், ஒரு கிலோமீட்டருக்கு பாதை அமைக்க ரூ. 120 கோடி செலவாகும். மொத்தம் உள்ள 40 கிலோமீட்டரில், 14 கிலோமீட்டர் பாதை தரைக்கு அடியில் அமையும் என்றார் ரெட்டி.












Click it and Unblock the Notifications