சோனியா காந்தி பதவிக்கு ஆசைப்பட்டதில்லை-ஜி.கே.வாசன்
விழுப்புரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி விழாவில் பேசியதாவது,
மத்தியில் அமைந்துள்ள கூட்டணி மக்களால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும். இந்த கூட்டணி சார்பில் பிரதமர் பதவிக்கு சோனியா முன் நிறுத்தப்பட்டார்.
அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பதவியை வேண்டாம் எனக்கூறி மன்மோகன் சிங்குக்கு அவர் வழங்கினார். சோனியா என்றும் பதவிக்கு ஆசைப்பட்டதே இல்லை.
நகரங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதை போல கிராமங்கள் அனைத்தும் முன்னேற வேண்டும் என்று மத்திய அரசு திட்டங்களை அமலாக்கி வருகின்றது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து சமுதாயத்துக்கும் ஏற்ற வகையில் மத்திய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது.
அதனை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் மக்கள் ஆட்சியாக விளங்குகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சியினருக்கு உள்ளது. அவ்வாறு எடுத்துச் சொன்னால் காமராஜர் நினைத்தபடி தமிழகத்தில் காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும். அதற்கு இளைஞர்கள் துடிப்பாக செயல்படவேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications