கிரஹலட்சுமி- வேணுபிரசாத் விவகாரத்து மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரஹலட்சுமியின் முதல் கணவர் நாராயணன் வேணுபிரசாத் தாக்கல் செய்த விவகாரத்து மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரசாந்துக்கும், கிரஹலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கருத்து வேறுபாட்டால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந் நிலையில் கிரஹலட்சுமிக்கும் வேணுபிரசாத்துக்கும் திருமணம் நடந்ததை தன்னிடம் மறைத்துவிட்டதாகக் கூறி விவாகரத்து கோரி மனு செய்தார் பிரசாந்த்.
இந்நிலையில் நாராயணன் வேணுபிரசாத் தனக்கும், கிரஹலட்சுமிக்கும் 1998ம் ஆண்டு பதிவு திருமணம் நடந்துள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார்.
இதையடுத்து தனக்கும், கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி பிரசாந்த நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கிடையில் கிரகலட்சுமியிடம் இருந்த விவகாரத்து கேட்டு நாராயணன் வேணுபிரசாத்தும் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் கிரகலட்சுமியும், வேணுபிரசாத்தும் ஆஜராகினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 2008 பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?













Click it and Unblock the Notifications