மலேசியா: குடும்பத்தினருடன் பேச சிறையில் உள்ள 5 தமிழர்களுக்கு அனுமதி
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்துப் பேச மலேசிய அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
மலேசியாவில் சம வாய்ப்பு கோரி போராட்டத்தில் குதித்துள்ள இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார், கங்காதரன், மனோகரன், வசந்தகுமார், கணபதிராவ் ஆகிய 5 பேர் சமீபத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோலாலம்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுண்டிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களைப் பார்க்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படும் என மலேசிய உள்துறை துணை அமைச்சர் பூ ஆ கியோ கூறியுள்ளார்.
இதுகுறித்து பூ ஆ கியோ கூறுகையில், பிற கைதிகளைப் போலவே ஹிண்ட்ராப் தலைவர்களும் நடத்தப்படுவர். அவர்களை, அவர்களது குடும்பத்தினர், விதிமுறைகளின்படி முன்கூட்டியே விண்ணப்பித்து விட்டுப் போய் பார்க்கலாம். அவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி தரப்படும் என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தமிழர்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காலவரையின்றி சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போலீஸ் உதவியை நாடும் மலேசியா:
இதற்கிடையே, மலேசியா வாழ் தமிழர்களை கண்காணிக்க சர்வதேச போலீஸின் உதவியை மலேசியா அரசு நாடவுள்ளது.
இன்டர்போல், ஈரோபோல் உள்ளிட்ட சர்வதேச போலீஸின் உதவியை நாடவுள்ளது மலேசியா. மேலும், ஹிண்ட்ராப் அமைப்பின் நிறுவன தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தற்போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால் அவரைப் பிடிக்கவும் இன்டர்போல் உதவியை மலேசிய அரசு நாடவுள்ளதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications