கருணாநிதி-அச்சுதானந்தன் இன்று சந்திப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும் இன்று இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள மாநில முதல்வர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இதை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதில் கேரளா சார்பில் அச்சுதானந்தனுடன், அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் பங்கேற்கிறார். தமிழக அரசுத் தரப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.
கூட்டத்திற்குப் பின்னர் இரு மாநில முதல்வர்களும் தனித் தனியே செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அதிகரிப்பது மற்றும் கேரள அரசின் புதிய அணைத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications