பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு
டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெறவுள்ள அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், டெல்லியில் இன்று தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். இதுதவிர, பிரதமர் தலைமையில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய முதல் அமைச்சர்களின் மாநாடு நாளை நடைபெறுகிறது.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
முன்னதாக டெல்லி போய்ச் சேர்ந்த முதல்வர் கருணாநிதியை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம், எஸ்.ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி உட்பட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
மேலும் டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் ஏராளமான திமுகவினர் திரளாக கூடி வரவேற்றனர்.
பின்னர் சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த கருணாநிதி அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் பிரதமரை மாலை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.
அப்போது அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமருடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்திய பின்னர் இரவு தமிழ்நாடு இல்லம் திரும்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications