அல் கொய்தா தீவிரவாதி வருவதாக வதந்தி- சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி வருவதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய வேலூரைச் சேர்ந்த சங்கர் என்ற நபர் துபாயிலிருந்து வரும் விமானத்தில் கபீர் முகம்மது மரைக்காயர் என்பவர் வருகிறார். அவர் ஒரு அல்-கொய்தா தீவிரவாதி என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்திற்குத் தகவல் தரப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.
அல்-கொய்தா தீவிரவாதியைப் பிடிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டிருந்தனர்.
கியூ பிரிவு போலீஸாரும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் துபாயிலிருந்து வரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
துபாயிலிருந்து வந்த இரு விமானங்களில் மரைக்காயர் (54) இல்லை. ஆனால் எமிரேட்ஸ் விமானத்தில் அவர் இருந்தார்.
இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கடலூரைச் சேர்ந்தவர் என்றும் துபாயில் கடந்த 20 வருடங்களாக மதரசா ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் என்றும், அவருக்கும் அல் கொய்தாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிய வந்தது.
பக்ரீத் கொண்டாடுவதற்காக தனது மனைவியுடன் அவர் வந்தார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
தவறான தகவலைத் தெரிவித்த சங்கருக்கு தற்போது போலீஸார் வலை விரித்துள்ளனர். முன் விரோதம் காரணமாக அவர் இப்படி ஒரு தவறான தகவலை சங்கர் தெரிவித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications