ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீநம்பெருமாள் நாளை காலை 6 மணிக்குமோகினி அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு செய்து அர்ச்சுன மண்டபம் சேர்கிறார்.
காலை 7 மணி முதல் திரை, பொதுஜன சேவை, அலங்காரம், அரையர் 2வது சேவை ராவணவதம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், உபயகார மரியாதை நிகழ்ச்சிகள் முடிந்து மீண்டும் பொதுஜன சேவையுடன் மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படு ஆரியப்படாள் வாசல் வருகிறார்.
அங்கிருந்து திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருமண்டபம் சேர்ந்து, ஆழ்வாராதிகள் மரியாதையாகி, கருமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.
விழாவில் நாளை அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. இந்நிகழ்ச்சி காலை 4 மணி முதல் 6 மணி வரை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். கோவிலில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications