குமாரசாமிக்கு இருதய ஆபரேஷன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் மருத்துவமனையில் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு இன்று அடைபட்ட இருதய வால்வை சரி செய்யும் அறுவைச் சிகிச்சை நடந்தது.
நெஞ்சு வலி காரணமாக குமாரசாமி பெங்களூர் ஒக்கஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இருதய வால்வு ஒன்றில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய இன்று அறுவைச் சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் தேறி வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி விஷால் பாலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக குமாரசாமி கூறுகையில், எனக்கு நான்கு மாதங்களாகவே நெஞ்சு வலி இருந்து வந்தது. கடந்த 20 மாதங்களாக நான் உடல் நலம் குறித்துக் கவலைப்படாமலேயே இருந்துவிட்டேன்.
எனது குடும்பத்தினர் கூட உடல் நலனில் அக்கறை காட்டுமாறு கூறி வந்தனர். ஆனால் நான் தான் கவனக்குறைவாக இருந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications