மத்திய அரசிடம் 500 மெகாவாட் மின்சாரம் கோரும் தமிழகம்
டெல்லி: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க மத்தியத் தொகுப்பில் இருந்து உடனடியாக 500 மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவிடம் தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் ஷிண்டேயை சந்தித்து இந்தக் கோரிக்கையை முதல்வர் முன் வைத்தார். அப்போது நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரத்தைத் தருமாறு கருணாநிதி கோரினார்.
இச் சந்திப்பிக்குப் பின் ஷிண்டே கூறுகையில், தமிழகம் மின் தட்டுப்பாட்டை தானே போக்கிவிடும் திறமை கொண்ட மாநிலம் தான். ஆனால் அங்கு தற்போது காற்றாலை மின்சாரம் சரியாக இயங்காததால் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் தமிழகத்துக்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நிச்சயம் பரீசிலித்து உதவும் என்றார்.
இந்தக் கோரிக்கை ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் தமிழகத்தில் பெரிய அளவில் மின் தட்டுபாடெல்லாம் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கதை விட்டுக் கொண்டிருப்பது நினைவுகூறத்தக்கது.
ஜனாதிபதியுடன் கருணாநிதி சந்திப்பு:
முன்னதாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற கருணாநிதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்தார். அவரது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அன்புமணி சந்திப்பு:
பின்னர் முதல்வர் கருணாநிதியை மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி சந்தித்து பேசினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications