கொழும்பில் ரயில் மீது கண்ணிவெடி தாக்குதல்: 300 பயணிகள் தப்பினர்
கொழும்பு: கொழும்பில் பயணிகள் ரயில் மீது நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திரிகோணமலையில் இருந்து கொழும்பு சென்ற ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் கண்ணி வெடியில் சிக்கியது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்து சிதறியதில் ரயில் என்ஜினும், தண்டவாளமும் சேதமடைந்தன.
ஆனால், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த 300 பயணிகளும் உயிர் தப்பினர். விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
பிரபாகரன் காயம் உண்மை-இலங்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விமானப்படை தாக்குதலில் காயமடைந்தது உண்மை என்று இலங்கை ராணுவம் மீண்டும் கூறியுள்ளது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தார் என்ற செய்தியை கொழும்பிலிருந்து வெளியாகும் தி நேஷன் இதழ் வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த செய்தியை விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் மறுத்ததுடன், பிரபாகரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியதாவது,
கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் என்ற இடத்தில் கடந்த மாதம் 26ம் தேதி மாலை 5.25 மணிக்கு இலங்கை விமானப்படை விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியது.
அப்போது பதுங்கு குழி சரிந்ததில் அதிலிருந்த பிரபாகரன் காயமடைந்து விட்டார். ஆனால் அவருக்கு எந்தளவு காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என்றனர்.
பிரபாகரன் குறித்து இலங்கை எத்தனையோ புரளிகளை இதற்கு முன்பும் கிளப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியும் புரளியா என்பது தெரியவில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications